சிலிண்டர் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்தது

கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்தது

Update: 2021-02-06 14:28 GMT
பேரையூர்,

மதுரையில் இருந்து கியாஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் அடுத்து உள்ள சாலை வளைவில் மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டயர் வெடித்து நிலைதடுமாறி சாலையிலேயே லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்