மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள ஊசி நாட்டான் வட்டம் பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மண் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்றபோது மண் கடத்தி வந்த டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் ஓடிவிட்டார்.
விசாரணையில் மண் கடத்தி வந்த டிராக்டர் ஊசிநாட்டன் வட்டம் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவருக்கு சொந்தமானது என்பது ெதரியவந்தது.
இதனையடுத்து வருவாய்த்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.