குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி நியூ செல்வநகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி லூர்து கிளன் பவித்ரா (வயது 34). கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வேதனையில் இருந்த லூர்து கிளான் பவித்ரா, நேற்று முன்தினம் வீட்டில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.