கரூர் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கரூர் அருகே பள்ளி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-06 03:24 GMT
கரூர்,

கரூர் தாந்தோணிமலை அருகே உள்ள முத்தாளம்பட்டி வசந்தம் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் பார்கவி (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
 இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் படிப்பதற்காக பார்கவியின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்திருந்தனர். இதனால், அவர் வீட்டு வேலைகளை சரிவர செய்யாமல் செல்போனை அதிகம் பயன்படுத்தி வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், மனவேதனை அடைந்த பார்கவி விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த பெற்றோர், மகளை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பார்கவி உயிரிழந்தார்.
 இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்