அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அாியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவரும், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2 பேரும் என மொத்தம் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,704 ஆக உயர்ந்துள்ளது. அதில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 4,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 425 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.