நாமகிரிப்பேட்டை அருகே, பெண் தீக்குளித்து தற்கொலை
நாமகிரிப்பேட்டை அருகே சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
நாமகிரிப்பேட்டை,
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி உமாதேவி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் சமீபகாலமாக உமாதேவி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் உமாதேவி மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உமாதேவி நேற்று இறந்தார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.