மகா மாரியம்மன் கோவில் குண்டம் விழா

மகா மாரியம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது

Update: 2021-02-06 01:29 GMT
ஊஞ்சலூர்
ஊஞ்சலூரை அடுத்த புஞ்சை கொளாநல்லி கிராமம் அருகே பெரிய செம்மாண்டாம் பாளையத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
28-ந் தேதி கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மேலும் தினமும் அபிஷேகம் செய்யப்பட்டு, சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்து வந்தது.
நேற்று முன்தினம் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து பெண்கள் அனைவரும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டும், மாவிளக்கு எடுத்து வந்தும் வழிபட்டனர். முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. இதில் ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மாலை 3 மணி அளவில் நடக்கும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைந்தது.

மேலும் செய்திகள்