மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதித்த நெற்பயிர்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதித்த விளை நிலங்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், கண்ணீர் மல்க குறைகளை எடுத்து கூறினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதித்த விளை நிலங்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், கண்ணீர் மல்க குறைகளை எடுத்து கூறினர்.
மத்திய குழுவினர் ஆய்வு
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை நேற்று வேளாண்த்துறை இயக்குனர் தெட்சிணாமூர்த்தி முன்னிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரக மண்டல மேலாளர் ரணஞ்சேசிங் தலைமையில், மத்திய மீன்வளத்துறை மேம்பாட்டு ஆணையர் பவுல்பாண்டியன், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குனர் ஷுபம் கார்க் ஆகிய 3 பேர் அடங்கிய மத்திய குழுவினர் மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதா ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட ெநற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
பாதிக்கப்பட்டுள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ந்்தேதி முதல் 16-ந் தேதி வரை கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 68,266 எக்டேர் சம்பா பயிர்களில், 15,546 விளை நிலத்தில் சாகுபடி செய்திருந்த 66,087 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாறு அருகே திருவிளையாடம் பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
குறைகளை தெரிவி்த்தனர்
தொடர்ந்து காட்டுச்சேரி ஊராட்சி கே.டி.பாளையம் கிராமத்தில் நிலக்கடலை பாதிப்பையும் மற்றும் திருக்கடையூர் அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்தில் நெற்பயிர் பாதிப்புகளையும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள், நெற்பயிர்கள் பாதிப்பு குறித்தும், நிலக்கடலை பாதிப்பு குறித்தும் மத்திய குழுவிடம் கண்ணீர் மல்க குறைகளை தெரிவித்தனர்.
ஆய்வின்போது செம்பனார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ், வேளாண்மை அலுவலர் குமரன், உதவி வேளாண்மை அலுவலர் உமாபசுபதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.