ஆண்டிமடம், போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி

ஆண்டிமடத்தில் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-02-06 01:10 GMT
ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமை தாங்கி கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து பேசினார். 

இதையடுத்து ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார், குவாகம் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் ஆண்டிமடம், குவாகம் போலீசார் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதைத்தொடர்ந்து மற்ற துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பொதுமக்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடப்படும் என்று வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்