அரியலூர் மாவட்டத்தில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-02-06 00:06 GMT
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்து கொண்டு, காவல் அலுவலர் சுரேந்தரை மக்களுக்கு அறிமுகம் செய்து பேசினார். அப்போது, கல்லங்குறிச்சி மற்றும் மணக்குடி, உசேனாபாத், சீனிவாசபுரம் உள்ளிட்ட கிரமாங்களில் எந்த ஒரு குற்ற சம்பவங்கள் நடந்தாலும் சுரேந்தரை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நாட்டுப்புற பாடல்கள் மூலமும், எமதர்மன் வேடமணிந்தும் மக்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள், முக கவசம் ஆகியவற்றை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். இதையடுத்து அவரும், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதியும், புன்னகை தேடி திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குழந்தைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக எந்த புகாரையும் அளிக்க சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 அழைக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரியலூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பாரதிதாசன், கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு, அரியலூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்