உதவி மின் பொறியாளர் அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் திடீர் சாவு
உதவி மின் பொறியாளர் அலுவலக வருவாய் மேற்பார்வையாளர் திடீரென இறந்தாா்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்வேல்(வயது 45). இவர் உடையார்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற செந்தில்வேல், மதியம் 3 மணியவில் அலுவலகத்தில் வசூலான மின் கட்டண தொகையை உடையார்பாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்தினார். பின்னர் வீட்டிற்கு சென்றபோது செந்தில்வேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தில்வேலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்த செந்தில்வேலுக்கு கீதா என்ற மனைவியும், இமையவன்(13), பூரணசந்திரன்(6) என்ற மகன்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.