குருவப்பநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகம் மீது அவதூறு பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மனு
குருவப்பநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகம் மீது அவதூறு பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மனு கொடுத்துள்ளார்.
உடுமலை:-
குருவப்பநாயக்கனூர் ஊராட்சி நிர்வாகம் மீது அவதூறு பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மனு கொடுத்துள்ளார்.
குருவப்பநாயக்கனூர் ஊராட்சி
உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது குருவப்பநாயக்கனூர் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியை சேர்ந்த 5 பேர் கடந்த 1-ம் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் குருவப்பநாயக்கனூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு கூடுதலாக தொகை வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஊராட்சி நிர்வாகத்தினர் மனு
இந்த நிலையில் குருவப்பநாயக்கனூர் ஊராட்சி தலைவர் டி.தமிழ்செல்வி தமிழரசு, துணைத்தலைவர் நாகராஜ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஜி.ஜனார்த்தனன், தி.மு.க.நிர்வாகி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-
குடிநீர் இணைப்பு
எங்கள் ஊராட்சியைச் சேர்ந்த 5 பேர் ஊராட்சி நிர்வாகத்தைப்பற்றி அவதூறாக பேசி வருகிறார்கள். தனிநபர் வீட்டு குடிநீர்குழாய் இணைப்பிற்கு டெபாசிட் தொகைரூ.2ஆயிரம், ஒரு வருட குடிநீர் கட்டணம் ரூ.600மற்றும் மக்கள் பங்களிப்பு தொகைரூ.1, 000 ஆகியவற்றிற்கு முறைப்படி ஊராட்சி ரசீது கொடுக்கப்பட்டு, பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பும் கொடுக்கப்பட்டு விட்டது.
ஆனால் ஊராட்சிக்கு 2ஆண்டுகளாக வீட்டு வரியும், குடிநீர் கட்டணமும் கட்டாத தவர்கள் ஊராட்சி நிர்வாகத்தின் மீது அவதூறு பேசி வருகின்றனர்.
ஜல் ஜீவன் திட்டம்
மேலும் ஜல்ஜீவன் திட்டத்தில் 80 குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுத்துள்ளோம். மேலும்ஊராட்சி முழுவதும்100வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு 14-வது நிதிக்குழு மானியம் மற்றும்15-வது நிதிக்குழு மானியத்தொகையிலும், எங்களது ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலும் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை செய்யவிடாமல் இந்த நபர்கள் இடையூறு செய்து, ஊராட்சியின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றனர்.அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.