பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-05 23:26 GMT
திருச்சி மலைக்கோட்டை வடக்கு ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மகள் சஞ்சிதா (வயது 27) பி.இ. படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் எம்.எஸ். மேல்படிப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் அமெரிக்காவில் இருந்து சொந்தஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த சஞ்சிதா, நேற்று மதியம் தனது அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். 
பின்னர், சஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சஞ்சிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்