நெல்லை-திருச்செந்தூர் அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணி தொடங்கியது

நெல்லை-திருச்செந்தூர் இடையே 61 கிலோ மீட்டர் தூர அகல ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணி தொடங்கியது

Update: 2021-02-05 22:13 GMT
மின்மயமாக்கும் பணி
ரெயில்வே துறையை நவீன மயமாக்கும் வகையில், அனைத்து ரெயில்வே வழித்தடங்களையும் அகல ரெயில்பாதையாக மாற்றவும், இரட்ைட ரெயில்பாதை அமைக்கவும், மின்மயமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு கோட்டத்திலும் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை கோட்டத்தில் மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வழியாக கங்ைககொண்டான் வரையிலும் இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டு, அதிவேக ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

நெல்லை- திருச்செந்தூர்
தொடர்ந்து நெல்லை-திருச்செந்தூர் இடையே 61 கிலோ மீட்டர் தூர அகல ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த வழித்தடத்தில் நெல்லை கொக்கிரகுளம் ரெயில்வே ஆற்றுப் பாலத்தில் இருந்து தெற்கு பைபாஸ் ரோடு பாலம் வரையிலும் தண்டவாளத்தின் அருகில் மின்கம்பங்கள் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டு கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடம் முழுவதும் மின்கம்பங்கள் அமைக்கவும், துணை மின் நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் ஓராண்டுக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் இடையிலான அகல ரெயில்பாதையை மின்மயமாக்கினால், அதன் வழியாக இயக்கப்படும் ரெயிலின் பயண ேநரம் குறையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்