போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
மூங்கில்துறைப்பட்டு போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலிசாருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கூறும்போது, கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானதாக உள்ளதால் அதை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.