நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன

Update: 2021-02-05 20:05 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் 2020-21 -ம் ஆண்டில் சம்பா சாகுபடி பருவத்தில் நடைபெறும் அறுவடையை முன்னிட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் வட்டாரத்தில் தூத்தூர், திருமழபாடி, குருவாடி, ஏலாக்குறிச்சி, கீழகாவட்டாங்குறிச்சி, கரைவெட்டி, பளிங்காநத்தம், எலந்தைகூடம், காமரசவள்ளி, ஓரியூர், கள்ளூர், திருவெங்கனூர், திருமானூர், வடுகபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. 

இதேபோல் செந்துறை வட்டாரத்தில் குழுமூர், சன்னாசிநல்லூர், தா.கூடலூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டாரத்தில் கோடலிகருப்பூர், ஜி.கே.புரம், வாழைக்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, ஸ்ரீபுரந்தான், இடங்கன்னி, காரைக்குறிச்சி, கார்குடி ஆகிய கிராமங்களிலும், ஆண்டிமடம் வட்டாரத்தில் ஆண்டிமடம், பெரியாத்துக்குறிச்சி ஆகிய கிராமங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. 

எனவே அந்தந்த பகுதிக்கு அருகே உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்