இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெமிலி
பனப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17-வயது இளம்பெண் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடன் பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம் கொடையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரைராஜ் (23) என்பவருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதற்காக இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதுகுறித்து துரைராஜ், இளம்பெண்ணின் தந்தைக்கு போன் செய்து திருச்சியில் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை தனது மகளை ஒப்படைத்து விடும்படி கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து துரைராஜ், இளம்பெண்ணுடன் ஊர் திரும்பியுள்ளார்.
பெண்ணின் தந்தை நெமிலி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இளம்பெண்ணை ஏமாற்றியதாக, இன்ஸ்பெக்டர் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் துரைராஜை கைதுசெய்தார். இளம்பெண் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார்.