தலைமை காவலரை தாக்கிய வாலிபர் கைது
தலைமை காவலரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
சாயல்குடி,
சாயல்குடி அருகே சண்முக குமாரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது31). அதே கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் (24). செல்லையாவை, ராம்குமார் மதுபாட்டில் வாங்கி வரச் சொல்லியுள்ளார் அதில் ஏற்பட்ட தகராறில் ராம்குமார் செல்லையாவை தாக்கியுள்ளார் இதுகுறித்த புகாரின் பேரில் சாயல்குடி போலீசார் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் இந்த வழக்கிற்காக சாயல்குடி இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தலைமையில் தலைமை காவலர் முத்து வழி விட்டான் (42) மற்றும் போலீசார் சண்முக குமாரபுரம் சென்று ராம்குமாரை தேடி உள்ளனர். அப்போது ராம்குமார், தலைமை காவலர் முத்து வழி விட்டானை கம்பால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் சந்தனாபோஸ் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தார்.