சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்பிக்நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி ஸ்பிக்நகரில் ஸ்பிக் நிறுவனம், ஸ்பிக் நகர் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினாா். அவா் இருசக்கர வாகன ஓட்டிகள் 20 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாா், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஸ்பிக்நகர் ஆலையின் முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.