வேலூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 37 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று 4-வது நாளாக அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்றும், கொரோனா தொற்றால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட 37 அரசு ஊழியர்களை சத்துவாச்சாரி போலீசார் கைது செய்தனர்.
--