திருவண்ணாமலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்

திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சாைல மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-02-05 11:21 GMT
திருவண்ணாமலை,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.  இதில் 75 பெண்கள் உள்பட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்