கூடுதலாக 184 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது

திருப்பரங்குன்றம் தொகுதியில் கூடுதலாக 184 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.;

Update: 2021-02-05 06:07 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் மற்றும் தெற்கு, மேற்கு என்று 3 தாலுகாஉள்ளது. இதில்  திருப்பரங்குன்றம் தாலுகாவில் 124, தெற்கு தாலுகாவில் 129, மேற்கு தாலுகாவில் 42 என்று 295 வாக்குசாவடிகள் உள்ளன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாக்காளர்கள் இடையே நெருக்கடியை தவிர்ப்பதற்காக ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள சாவடிகளை தனியாக பிரித்து கூடுதல் வாக்குசாவடிகள் அமைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கூடுதல் வாக்குசாவடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது கூடுதலாக 184 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிகிறது. இதனால் சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் 479 வாக்குசாவடிகள் அமைகிறது.

மேலும் செய்திகள்