கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது

Update: 2021-02-05 05:45 GMT
பட்டிவீரன்பட்டி

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள எம்.வாடிப்பட்டி அன்பு நகரில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, அந்த வீட்டில் சுரேஷ் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி (வயது 37) கஞ்சா விற்றதும், 8½ கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து பாக்கியலட்சுமியை கைது ெசய்தனர். மேலும் 8½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

முன்னதாக போலீசார் சோதனையிட வந்தபோது, பாக்கியலட்சுமியிடம் கஞ்சா வாங்க ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். 

அவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்