கொரோனாவை தடுக்க சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.
கொரோனாவை தடுக்க சிறப்பாக பணியாற்றிய கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மத்திய மந்திரி விருது வழங்கி பாராட்டு.
சென்னை,
தமிழக காவல்துறையில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பணியாற்றிய கருணாசாகர், தற்போது மத்திய அரசு பணியில் உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை-எளிய மக்களுக்கும், புலம் பெயர்ந்த மக்களுக்கும் பல்வேறு வகைகளில் சிறப்பாக பணி செய்ததை பாராட்டி, உலக சாதனை புத்தகம் மற்றும் இந்திய-இங்கிலாந்து கலாசார கழகம் சார்பில், பெருமைக்குரிய இந்தியர் என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.
டெல்லியில் நடந்த விழாவில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே இந்த விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார். கருணாசாகர் சென்னையில் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பணியாற்றி உள்ளார். நெல்லை, திருச்சி நகர போலீஸ் கமிஷனராகவும் இவர் பணி செய்துள்ளார்.