அரியலூரில் 3-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம்

அரியலூரில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-02-05 01:52 GMT
பெரம்பலூா்,

கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று 3-வது நாளாக மாவட்ட தலைவர் பஞ்சாபகேசன் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 86 பெண்கள் உள்பட 140 அரசு ஊழியர்களை அரியலூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்