அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்,
அரக்கோணம் வின்டர் பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைககிளுடன் நின்றிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பொன்மணி (வயது 26), ராமன் (25) என்பதும் ெதரியவந்தது. அவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராமம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பொன்மணி ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர். மேலும் இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.