டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னைக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள் பெரம்பலூர் வருகை

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னைக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்கள் பெரம்பலூருக்கு வந்தனர்.

Update: 2021-02-05 00:25 GMT
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் பயணிக்க முடிவெடுத்தனர். கடந்த 31-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட அந்த இளைஞர்கள் நேற்று மாலை பெரம்பலூைர வந்தடைந்தனர். அவர்களை பெரம்பலூர் மாவட்ட மக்கள் பாதை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகாதேவன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் வெண்மணி வரதராஜன் (வேப்பூர்), மணிகண்டன் (வேப்பந்தட்டை), செந்தமிழ்ச்செல்வன் (ஆலத்தூர்) மற்றும் பெரம்பலூர் இளைஞர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சத்யா, மணி மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். இதையடுத்து இளைஞர்கள் விழுப்புரத்திற்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் வருகிற 7-ந்தேதி சென்னையை சென்றடைகின்றனர்.

மேலும் செய்திகள்