சேலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி கட்டாமல் ரூ.7¾ கோடி ஏய்ப்பு வணிகர் கைது

சேலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி கட்டாமல் ரூ.7¾ கோடி ஏய்ப்பு வணிகர் கைது.

Update: 2021-02-05 00:08 GMT
சேலம்,

சரக்கு மற்றும் சேவை வரி ஆணையரகத்தில் பதிவு பெற்ற வணிகர் ஒருவர் ரூ.7¾ கோடி ஜி.எஸ்.டி. வரியை வசூலித்து அதனை அரசு கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்தார். மேலும் அவர் அந்த பணத்தை வேறு வகை செலவினங்களுக்கு பயன்படுத்தியது அதிகாரிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
வரி செலுத்துபவர் வசூல் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. தொகையை 3 மாதங்களுக்கு மேலாக தன்வசம் வைத்துக் கொள்ள கூடாது. இந்த விதிமீறல்கள் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் வணிகர்கள், வரி செலுத்துபவர்கள், தாங்கள் வசூலித்த தொகையை உரிய நேரத்திற்குள் அரசுக்கு செலுத்தவும், காலமுறை படிவங்களை உரிய நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சரக்கு மற்றும் சேவை வரி சேலம் ஆணையர் மீனலோச்சனி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்