திருச்சியில் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 120 அரசு ஊழியர்கள் கைது

திருச்சியில் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட 120 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-05 00:05 GMT
திருச்சி, 

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்