17 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற தந்தை; சொல்பேச்சு கேட்காமல் சுற்றித்திரிந்ததால் ஆத்திரம்

மேச்சேரி அருகே 17 வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு தந்தையே கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. மகன் சொல்பேச்சு கேட்காமல் சுற்றித்திரிந்த ஆத்திரத்தில் தந்தை இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Update: 2021-02-05 00:00 GMT
ஊர் சுற்றியதால்...
சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டி ஊராட்சி மன்னாதனூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் துரித உணவக கடையில் சமையல் மாஸ்டராக ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், ரசீகரன் (வயது 17), தரணிதரன்(15) என்ற 2 மகன்களும் இருந்தனர். 
ரசீகரன் பெற்றோர் பேச்சை கேட்காமல் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை குமார் மகனை கண்டித்துள்ளார்.

இருப்பினும் அவரின் பேச்சை கேட்காமல் ரசீகரன் தொடர்ந்து ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அக்கம்பக்கத்தினர் மகன் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அடிக்கடி குமாரிடம் புகார் கூறியுள்ளனர். இதனால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார். 

தூக்கில் தொங்க விட்டு..
கடந்த வாரம் ரசீகரன் சிறு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமாரிடம் மீண்டும் புகார் தெரிவித்து அவரை திட்டி உள்ளனர். இதையடுத்து மகன் ரசீகரனை கண்டித்துள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ரசீகரனை, குமார் கண்டித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த குமார் வீட்டின் கதவை பூட்டினார். பின்னர் மகனின் 2 கைகளையும் பின்புறமாக கயிற்றால் கட்டினார். 
இதைத்தொடர்ந்து புடவையால் ஓட்டு வீட்டில் உள்ள மரச்சட்டத்தில் தூக்குப்போட்டு அதில் மகனை தொங்க விட்டார். இதில் ரசீகரன் துடிதுடித்து இறந்தார். பின்னர் அவர் வீட்டை பூட்டி விட்டு மேச்சேரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

வழக்குப்பதிவு
இதையடுத்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மேச்சேரி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். உடனடியாக ரசீகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த பயங்கர சம்பவம் குறித்து குமாரின் மனைவி கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்