நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 6 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 10 பேர் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-02-04 23:46 GMT
 இந்த நிலையில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், கொங்கணாபுரத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 469 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 16 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்