திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டு குழு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு பட்ஜெட்டில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதாக அறிவித்ததை கண்டித்தும், மேலும் 2 வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் விஜய் ஆனந்த், பெலிக்ஸ் பால்ராஜ், ராதாகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.