ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் இணை ஆணையராக மாரிமுத்து பொறுப்பேற்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் இணை ஆணையராக மாரிமுத்து பொறுப்பேற்றுக்கொண்டார்;
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையராக பதவி வகித்து வந்த ஜெயராமன் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் பணியிடத்தை அசோக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இந்துசமய அறநிலையத்துறையில் வேலூர் மண்டல இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த செ.மாரிமுத்து, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு கோவில் பணியாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.