சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 20 பேர் கைது
சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
மின்சார சட்ட திருத்தம் 2020-ஐ திரும்ப பெற வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் திருச்சி தலைமை தபால்நிலையம் முன் தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் தொ.மு.ச. ஜோசப் நெல்சன், சி.ஐ.டி.யு. ரெங்கராஜன், ஏ.ஐ.டி.யு.சி. சுரேஷ், ஐ.என்.டி.யு.சி. வெங்கட்நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவா்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி தொழிலாளர் சட்டதொகுப்பு நகலை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.