பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் மர்ம ஆசாமி வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை பறிக்கு முயன்றுள்ளான்.
பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் மர்ம ஆசாமி வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை பறிக்கு முயன்றுள்ளான். தப்பி ஓடிய அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
பல்லடம்:-
பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் மர்ம ஆசாமி வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை பறிக்கு முயன்றுள்ளான். தப்பி ஓடிய அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கழுத்தை நெரித்தான்
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தை சேர்ந்தவர் தெய்வத்தாள்(வயது 68). இவரது கணவர் பழனிச்சாமி இறந்ததை அடுத்து, மகன் மயில்சாமி(47), மருமகள் பிரியா(32) மற்றும் பேத்திகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தெய்வத்தாள் ஒரு அறையிலும், மயில்சாமி குடும்பத்தினர் அருகில் உள்ள மற்றொரு அறையிலும் உறங்கச்சென்றனர். அதிகாலை இரவு சுமார் 2 மணி அளவில் தெய்வத்தாள் தங்கி இருந்த அறையிலிருந்து அலறல் சத்தம் கேட்டு மயில்சாமி சென்று பார்த்த போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தெய்வத்தாளின் கழுத்தை பிடித்து நெரித்துக்கொண்டு இருந்தார்.
மர்ம ஆசாமி தப்பினான்
உடனே மயில்சாமி அம்மாவை விடுடா என கத்தியபடி அவனை கைகளால் தாக்கினார். சுதாரித்துக்கொண்ட மர்ம ஆசாமி மயில்சாமியை தள்ளி விட்டு வெளியே தப்பி ஓடிவிட்டான். இதற்குள் அக்கம், பக்கத்தினர் வந்து விட்டனர். அனைவரும் சேர்ந்து தேடியபோது அவன் பிடிபடவில்லை. கண் மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் காயமடைந்த தெய்வத்தாள் பல்லடம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தெய்வத்தாள் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த வெளியூரைச்சேர்ந்த 2 வாலிபர்கள், தலைமறைவாகி உள்ளனர். தெய்வாத்தாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைக்காக நடத்தப்பட்ட கொள்ளை முயற்சியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நொச்சிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
===========
மர்ம ஆசாமியால் தாக்கப்பட்ட தெய்வத்தாள்