பொன்மலை ரெயில்வே பணிமனையில் 301-வது ரெயில் வேகன் வழியனுப்பும் விழா
பொன்மலை ரெயில்வே பணிமனையில் 301-வது ரெயில் வேகன் வழியனுப்பும் விழா நடைபெற்றது.
திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் ரெயில் பெட்டிகள் பழுதுபார்த்தல் மற்றும் சரக்கு ரெயில் பெட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று 300 மற்றும் 301-வது ஆர்.எஸ்.பி. வேகன் மற்றும் ரெயில்வே மின்மயமாக்கல் பணிக்கான இறுதியாக மாற்றியமைக்கப்பட்ட கோச்பெட்டி ஆகியவற்றை கொடியசைத்து வழியனுப்பி வைக்கும் விழா நடைபெற்றது. பணிமனை முதன்மை மேலாளர் சியாம்தர் ராம் அவற்றை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். முடிவில் பணிமனை முதன்மை எந்திரவியல் பொறியாளர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் பணிமனை முதன்மை மேலாளர் சியாம்தர் ராம் ஆகியோர் தலைமையில் மியாவாக்கி முறையில் 200 மரக்கன்றுகள் பணிமனைக்கு வெளியே உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியர்கள் நட்டனர்.