செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: விவசாயிகள் முற்றுகை

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

Update: 2021-02-04 22:31 GMT
செஞ்சி, 

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று 9 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். வழக்கம்போல் அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. அப்போது நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

அதன்படி 75 கிலோ எடைகொண்ட ஒரு மூட்டை பொன்னி நெல் அதிகபட்சமாக ரு.2 ஆயிரத்து 100-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,300-க்கும்,  டி.பி.டி. ரகம் குறைந்தபட்சமாக ரூ.950-க்கும், அதிகபட்சமாக ரூ.1300-க்கும், குண்டு நெல் குறைந்தபட்சமாக ரூ.850-க்கும், அதிகபட்சமாக ரூ.1150-க்கும் விலை போடப்பட்டது. 

ஆனால் இந்த விலை நிர்ணயம் கடந்த கால விலையை விட குறைவு என்றும், அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கூறி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை விவசாயிள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகள் கலைந்துபோக செய்தனர். 

இதுகுறித்து மூத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லின் தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்கிறோம். மழையில் நனைந்த பதர் நிறைந்த நெல்லை கொண்டு வருவதால் குறைவான விலை போடுகிறோம் என்றார். 

மேலும் செய்திகள்