ஆட்டு இறைச்சி சாப்பிட்ட பெண் சாவு

ஆட்டு இறைச்சி சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்

Update: 2021-02-04 17:07 GMT
வில்லியனூர், 

வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுமதி (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சுமதி வில்லியனூர் மார்க்கெட்டில் இட்லி மாவு வியாபாரம் செய்துவந்தார். கடந்த 2 ஆண்டு களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மதியம் சுமதி தனது வீட்டில் ஆட்டி இறைச்சி மற்றும் மீன் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் வந்ததை தொடர்ந்து, அவரது மகன் ராஜ்குமார் மற்றும் உறவினர்கள் சுமதியை வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

 அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீடு திரும்பிய சுமதி இரவில் படுத்து தூங்கினார். மறுநாள் காலை அவர் படுக்கையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சுமதியின் சாவு குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட  சுமதி,  ஆட்டு இறைச்சி, மீனை ஒரே நேரத்தில் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்