போலீஸ்காரர் மயங்கி விழுந்து திடீர் சாவு
பணியில் இருந்த போது போலீஸ்காரர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சித்தாலை கிராமத்தை சேர்ந்தவர் பூலோக சுந்தர்(வயது 42). இவர் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு இளவரசி என்ற மனைவியும், சுதன், சுவாதி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். திருமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.