நீடாமங்கலத்தில் இருந்து மதுரை, நெல்லைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து மதுரை, நெல்லைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டன

Update: 2021-02-04 16:13 GMT
நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து மதுரை, நெல்லைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகளை சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. 

இதற்காக நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகா பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், தெற்குநத்தம், அசேஷம், மூவாநல்லூர், ஆதனூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் என 2 ஆயிரம் டன் எடை கொண்ட சன்னரக நெல் மூட்டைகள் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. 

இதையடுதது சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ஆயிரம் டன் நெல் மதுரைக்கும், ஆயிரம் டன் நெல் நெல்லைக்கும் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்