தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 169 பேர் கைது
தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 169 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 169 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோரிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். அரசு துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மறியல்-கைது
அதன்படி 2-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-ந் தேதி தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். 4-ந் தேதியான இன்று மீண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் சங்க மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 130 பெண்கள் உள்பட 169 பேரை கைது செய்தனர்.