ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி ரெயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் விமல்ராஜ்.
இவரது மனைவி மகேஸ்வரி (வயது26). இவர் இடையம்பட்டி ரெயில்வே குடியிருப்பு காலனி பகுதியில் கஞ்சா
விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ்
இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கையில்
பையுடன் நின்றிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மகேஸ்வரி என்பதும்,
பையில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவரது கணவர் விமல்ராஜ் ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டார்
என்பது குறிப்பிட தக்கது.