புதிய ரக நிலக்கடலை விதை பண்ணையை திருவண்ணாமலை கலெக்டர் ஆய்வு
மேல்சிறுபாக்கம் கிராமத்தில் புதிய ரக நிலக்கடலை விதை பண்ணையை கலெக்டர் ஆய்வு செய்தார்;
திருவண்ணாமலை
மேல்சிறுபாக்கம் கிராமத்தில் புதிய ரக நிலக்கடலை விதை பண்ணையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தண்டராம்பட்டு தாலுகா மேல்சிறுபாக்கம் கிராமத்தில் விவசாயி ஒருவர் நிலத்தில் பயிரிட்டிருந்த புதிய ரக நிலக்கடலையை விதை பண்ணையாக பதிவு செய்திருந்தார். அதனை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது புதிய ரகத்தின் சிறப்பு இயல்புகளை கலெக்டரிடம் திருவண்ணாமலை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் மலர்விழி எடுத்துரைத்தார்.
அப்போது திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் மாரியப்பன், வேளாண்மை துணை இயக்குனர் சத்தியமூர்த்தி, தண்டராம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராம்பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.