கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியை ேசர்ந்தவர் பொண்ணு பாண்டியன். இவர் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்தது.
இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர்.