தர்மபுரி:
தர்மபுரியில் உள்ள அதியமான்கோட்டை பைபாஸ் சாலையின் ஓரப்பகுதியில் நேற்று முன்தினம் சிதைந்த நிலையில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவருடைய அடையாளம் தெரிந்தது. இறந்து கிடந்தவர் பென்னாகரத்தை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ்குமார் என்பதும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.