விருத்தாசலத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

விருத்தாசலத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2021-02-04 06:18 GMT
விருத்தாசலம், 

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாநில துணைத் தலைவர் நடராஜன், பழமலை, வெங்கடாஜலம், இளங்கோவன், வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

மேலும் செய்திகள்