ஆர்.கே.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

ஆர்.கே.பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் பலியானார். மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது.

Update: 2021-02-04 04:48 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த தேவலாம்பாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சோளிங்கரில் இருந்து சென்று கொண்டிருந்தார். சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் சிவா (வயது 21). இவர் தனது நண்பர் நவீன்குமார் (24) என்பவருடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் வள்ளிமலை கிராமத்தில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து இருவரும் தங்களது கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

புதூர்மேடு என்ற இடத்தில் இவரது மோட்டார் சைக்கிளும், ராமு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் நவீன்குமார் காயம் அடைந்தார். எதிரே வந்து மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராமு சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து நவீன்குமார் ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்