டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2021-02-04 02:18 GMT
பெரம்பலூர், 

ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து பெரம்பலூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை இந்திய மருத்துவ சங்க பெரம்பலூர் கிளை முன்னாள் தலைவர் டாக்டர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். சங்க தற்போதைய தலைவர் டாக்டர் வல்லபன், செயலாளரும், போராட்ட ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலப்பட மருத்துவ முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட மருத்துவ நலப்பணிகளின் இணை இயக்குனர் டாக்டர் திருமால் மற்றும் அரசு டாக்டர்கள், தனியார் மருத்துவமனை டாக்டர்கள், பல் டாக்டர்கள் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலையில் இந்திய மருத்துவ சங்கத்தின் மத்திய குழுவினர் முடித்து வைத்தனர். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி டாக்டர்கள் சார்பில் வருகிற 9-ந்தேதி பெரம்பலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை இரு சக்கர வாகன பேரணி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்