சேலத்தில் முஸ்லிம்கள் திடீர் சாலை மறியல்; 50 பேர் கைது
சேலத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா பிரமுகர் ஒருவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை முஸ்லிம்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா பிரமுகரை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு மண்டபத்துக்கு வேனில் அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.