புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை புதுக்கோட்டை உட்கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணவு ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில், உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவிப்பொறியாளர் அப்துல்ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. முடிவில் அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் உத்தரவின்பேரில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். சாலைகளில் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது உள்ளிட்டவை குறித்து கருத்துரை வழங்கப்பட்டது. இதில், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.